2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சீ.வியின் கருத்துக்கு கண்டனம்

Editorial   / 2019 ஜூலை 23 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

 அரசியல் அதிகாரங்களை பெறுவதற்குரிய மிகப்பெரிய மூலதனமாக இனவாதம் மாறிவிட்டதென்பதற்கு சீ.வி. விக்னேஸ்வரன் விலக்கல்ல என்பதை 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டதென்கின்ற ஆதாரமற்ற   குற்றச்சாட்டினை முன்வைத்திருப்பது விந்தையாகுமென  கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும்  காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

  கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் :

தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக முதலமைச்சராகிய சீ.வீ. அவர்கள் ,தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டு வெளியேறியதற்குப்பின் தனெக்கென ஒரு அரசியல் இருப்பை இனவாதத்தினூடாக தக்கவைக்க முயற்சிப்பது அவர் வகித்திருந்த ஆதாரபூர்வமான உண்மையின் பக்கம் மாத்திரம் நீதி செலுத்தும் உயர்   பதவிக்கு இவர் தகுதியற்றவராக இருந்திருப்பாரோ என எண்ணத்தோன்றுகிறது.

நல்லிணக்கம், ஒற்றுமை, சமாதானம், சகவாழ்வு என்று இந்த நாட்டில் எத்தனையோ விடயங்கள் பேரின சக்திகளால் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்ற இக்கால கட்டத்தில் சக சகோதர சிறுபான்மை மீது இவ்வாறான ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட்டதை முஸ்லிம் சமூகம் மிக வன்மையாக கண்டிக்கின்றதெனவும் அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X