2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சுதந்திரம் கிடைத்தும் அபிவிருத்தி இல்லை’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“நாம் பிளவுபட்டு நிற்பதால், சுதந்திரம் கிடைத்து 72 ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னமும் அபிவிருத்தி அடையாமல் இருக்கின்றோம்” என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸபாஹிர் மௌலானா ஆதங்கம் வெளியிட்டார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வு, பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன் தலைமையில், ஏறாவூர் வாவிக்கரை அஹமட் பரீட் மைதானத்தில் இன்று (04) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அலிஸாஹிர் மௌலானா, “நாம் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பட்டியலில் சேர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால், அபிவிருத்தி அடைவதற்குத் தேவையான அத்தனை வளங்களும் நமது நாட்டில் இருக்கின்றன.

“எனினும், அந்தப் பெருமையை அடைந்து கொள்ளாது நமது துரதிருஷ்டமே. அனைவர் மத்தியிலும் நாம் இலங்கையர் என்ற தேசிய வாதத்தை உருவாக்கவில்லை. அதனால்தான் இத்தனை பின்னடைவு.

“இலங்கையர் என்ற அற்புதமான கொள்கையை நடைமுறைப்படுத் கூடிய நாட்டின் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் இந்த நாட்டுக்குத் தேவை.

“அதன் மூலமாகவே, நாட்டுக்கு ஆளுமையும் அபிவிருத்தியும் ஏற்படும். நாம் அடைந்த சுதந்திரம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமாயின் இந்த அம்சங்கள் நாட்டுத் தலைவர்கிளிடமும் அரசியல் தலைவர்களிடமும் இருக்க வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .