2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

செயற்பாட்டாளர்கள் ஆளுநரைச் சந்திக்கின்றனர்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 மே 24 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுண்கடன் தொடர்பான புதிய கொள்கை வகுப்பை உருவாக்குவதற்கான யோசனைகளுடன், கிழக்கு மாகாண ஆளுநரை ரோஹித போகொல்லாகமவைச் சந்திக்கவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில், நுண்கடன் நிதியைப் பெற்றுக்கொள்வதால், வறிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து, ஆளுநருக்கு விளக்கவுள்ளதாகவும் செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது, சமூர்த்தி வங்கிகளில் முடங்கிப் போயிருக்கும் பல்லாயிரக்கணக்கான பணத்தை, பிரதேச மக்களின் வாழ்வாதார சுயதொழில் முயற்சிகளுக்கு வழங்கினால், நுண்கடன் நிதிகளைப் பெற்றுக்கொள்வதிலிருந்தும் அதிலிருந்து ஏற்படும் பாதக விளைவுகளில் இருந்து மக்களை பாதுகாக்கலாம் போன்ற யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.

இச்சந்திப்புக்கு ஆளுநர் பணிமனை அனுமதி வழங்கியுள்ளதெனவும், எனவே, வெகுவிரைவில் இச்சந்திப்பு இடம்பெறுமெனவும், சமூகநலச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .