2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சொந்த இடங்களிலே கடமையாற்றக் கூடிய நிர்வாக முறைமையை ‘உறுதி செய்வேன்’

Editorial   / 2019 மார்ச் 10 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

 

எனது ஆளுநர் பதவிக் காலத்தில் அலுவலர்கள் தமது சொந்த இடங்களிலேயே கடமையாற்றக் கூடியதான நிர்வாக முறைமையை  உறுதி  செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாகுமென, கிழக்கு மாகாண  ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இதன்மூலமே மனித வளத்தையும், அறிவு வளத்தையும் பயனுள்ள முறையில் முழுமையாகப் பெற்றுக் கொண்டு அபிவிருத்தியை நோக்கி நகர முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தில் நிலவிய தொழிநுட்ப உதவியாளர் நியமனங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் விவசாய திணைக்களத்தில் நிலவிய தொழிநுட்ப உதவியாளர் நியமனங்களை நிரப்பும் வகையில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்ற 12 பேருக்கான நியமனங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஆண்கள், பெண்கள் என அலுவலர்களில் பெரும்பாலானோர், தமது வேலைத்தலங்களை நோக்கிப் பயணம் செய்வதிலேயே அதிக நேர விரயத்தையும் தமது உடலாற்றலையும், பணச் செலவையும் எதிர்கொண்டு களைத்துப் போய் விடுவதால் ஆக்கபூர்வமான வினைத்திறனான சேவைகளை அவர்களால் ஆற்றமுடியாத துர்ப்பாக்கிய நிலையுள்ளது என்றார்.

எனவே, இத்தகைய மனித வள இழப்புகளை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி, அபிவிருத்தியின் அடைவு மட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .