2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

‘ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் போலி பிரசாரம்’

வா.கிருஸ்ணா   / 2019 ஏப்ரல் 16 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், சிலர் பொய்யான கருத்துகளை வெளியிட்டு வருகின்றார்கள் எனவும் இது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி அச்சப்படவில்லை எனவும் மின்சக்தி, சக்தி வலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  கடந்த காலங்களில் கொடுத்த வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்ற முடியாவிட்டாலும், மக்களுக்கான ஜனநாயக உரிமையை அவர்களுக்கு முற்றாக வழங்கியுள்ளோம் என்றார்.

நாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு, ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் வாழும் சூழலைத் தாம் உருவாக்கியுள்ளதாகவும் தமிழ் மக்களுக்கான பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதும் தமது முக்கியமான பொறுப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை நாம் தமிழர்களது பிரச்சினையாக அன்றி, தேசியப் பிரச்சினையாகத் தான் பார்க்கிறோம் என்று கூறிய அமைச்சர், இன்று வெள்ளை வான் கலாசாரமோ, கடத்தல் பயமோ இல்லையென்றார்.

“இந்த நிலையில், நாம் சில விடயங்களில் தாமதம் காட்டுவது, நாட்டின் ஐக்கியத்துக்காகவே அன்றி, தீர்வைப் பெற்றுக்கொடுக்கக்கூடாது என்றல்ல.

“இந்தப் பிரச்சினைக்கானத் தீர்வை நாம் இலங்கைக்குள் தான் பெற்றுக்கொள்ள வேண்டும். இதில், சர்வதேசத்தின் தலையீடு தேவையில்லை. இதனை நாம் சர்வதேசத்திடமே கூறிவிட்டோம்” என்றும் அமைச்சர் ரவி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .