2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

த.தே.கூதான் ஜனநாயகத்தைக் காப்பாற்றியது

Editorial   / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம்.நூர்தீன்

நாட்டை சர்வாகதிகாரப் போக்குக் இட்டுச் செல்லாது, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே, நீதிமன்றத்துக்குச் சென்றதாகக் கூறிய ஜனாதிபதி சட்டதரணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், நாட்டில் இருந்த சர்வாதிகார போக்கை, தமிழ் தேசியக் கூட்டமைப்பே, முளையோடு கிள்ளியெறிந்தது என, பரவலாகப் பேசப்படுவதாகவும் அவர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13ஆம் ஆண்டு நினைவு தினம், மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் ​நேற்று (25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்துரையாற்றுகையில்,

குடியரசாக இருந்து வரும் இந்த நாட்டை, முடியரசாக மாற்றுவதற்கான சதிவேலைகள், சமீபகாலமாக நடந்தேறியது என்றும் அதையடுத்து, நாட்டின் ஜனநாயத்தையும் இறைமையையும் பாதுகாப்பதற்கே, தமிழ்தேசிய கூட்டமைப்பும் இணைந்து கொண்டது என்றும் அவர் கூறினார்.

பெருபான்மையை நிரூபிக்க முடியாமலேயே, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என்றும் அரசமைப்பின் 19ஆவது சீர்திருத்ததின் பிரகாரம், நான்கரை ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் செயற்பட்ட பின்னரே, அதைகை் கலைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இதை கருத்தில் கொள்ளாமல், ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமையாலேயே, நீதிமன்றத்துக்குச் சென்றதாகவும் இதனால், தென்னிலங்கையில் மாத்திரமல்ல, சர்வதேச அளவில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மரியாதை உண்டு என்று அவர் கூறினார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .