2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தண்ணீர் தொழிற்சாலையை நிறுத்தக் கோரி ஜனதிபதிக்கு கடிதம்

பேரின்பராஜா சபேஷ்   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, பெரிய புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை நடவடிக்கைகளை மக்கள் கோரிக்கைக்கு மதிப்பளித்து நிரந்தரமாக நிறுத்த நடவடிக்கையெடுக்கும் படி தங்களை கோருகின்றோம் என தமிழ் உணர்வாளர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பெரிய புல்லுமலை, தண்ணீர் தொழிற்சாலையை தடைசெய்யுமாறுகோரி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் நேற்று (12) ஜனதிபதி மைத்திபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடித்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் புல்லுமலை எனும் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக செப்ரம்பர் 07ம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் ஸ்தம்பிதமானது. தண்ணீர் தொழிற்சாலையை மக்கள் ஏற்கவில்லை என்பதற்கு இதனைவிட எந்த சான்றும் தேவையில்லை”

இந்த தண்ணீர் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டால், எங்களது பௌதீக வளங்கள், விவசாயம் தொட்டு கால்நடைகள் வரை பாதிக்கப்படுவதுடன், எமது விவசாய நிலங்கள் உவர் நிலங்களாக மாறிவிடும் என்பது பற்றி பௌதீக ஆய்வாளர்கள் கூறும் எதிர்வு கூறல்கள் எம்மிடமிடமுள்ளது.

அத்துடன், இந்த தண்ணீர் தொழிற்சாலைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை தலைவருமாகிய அஸ்வர் என்பவர் உரிமை கோரினாலும் இதன் பின்புலம் ஹிஸ்புல்லாஹ் என்பவர் என்பது மக்கள் எல்லோரினதும் கருத்தாகும்.

 தண்ணீர் தொழிற்சாலைக்கு சார்பாக இத்தனை போராட்டங்கள் நடாத்தியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது தங்களது ஆதரவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிகாரமும் காரணமாக இருக்கலாம் என்றும் மக்கள் கருதுகின்றனர்.

எனவே, இந்த தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக முழு மாவட்ட மக்களும் தங்களது கருத்தை ஹர்த்தால் மூலம் பதிவு செய்துள்ளனர்.

“மக்களின் வேண்டுகோளை மதிப்பளிக்காது இருப்பின் மக்கள் போராட்டம் கொழும்பை நோக்கி விரிவடையும் என்றும் மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .