2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

தனி நபர் பிரேரணைக்கு கண்டனம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2020 ஜனவரி 12 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முஸ்லிம் விவாகம் - விவாகரத்துச் சட்டத்தை நீக்க கோரி, நாடாளுமன்ற உறுப்பினர்  ரத்ன தேரர், நாடாளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள தனி நபர் பிரேரணையை வன்மையாகக் கண்டிப்பதாக, மட்டடக்களப்பு மாநகர சபையின் முன்னாள உறுப்பினர் என். கே. றம்ழான் தெரிவித்தார்.

இது​ தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை வரலாற்றில் சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு, முஸ்லிம் விவாகம்  -விவாகரத்துச் சட்டம் நடைமுறையில் உள்ளதாச் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சட்டத்தால் நாட்டுக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ எந்தவிதமான பிரச்சினைகள்  இருந்தாக அச்சட்டங்களை எவரும் இதுவரை  சவாலுக்கு உட்படுத்தியதாக வரலாறு கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் சிறுபான்மை இனங்களில்  கலாசார உரிமைகளை படிப்படியாக இல்லாமல் செய்வதில் பௌத்த துறவிகளே மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் எனக் குற்றஞ்சாட்டிய அவர், கடந்த காலத்தில் ஹலால் தொடக்கம் கலாசார ஆடைகள் வரை பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் முன்நின்று  நடத்தியவர்கள் பௌத்த துறவிகளே என்றும் குற்றஞ்சாட்டினார்.

இவ்வாரான செயற்பாடுகளுக்கு ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்க கூடாதெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் அமைதியையும் ஐக்கியத்தையும் போதிக்க வேண்டிய பௌத்த துறவிகள், அடுத்த இனத்தின் உரிமைகளை இல்லாமல் செய்து, அதன்மூலம் இன வேறுபாடுகளையும் அமைதியின்மையையும் ஏற்படுத்துவதைக் கண்டிப்பதாகவும் கூறினார்.

பௌத்த துறவிகள், சிறுபான்மை இனத்தவர்களை அரவனைத்துச் செயற்பட வேண்டுமெனக் கூறிய அவர், அடுத்த இனத்தின் உரிமைகளைப் பறித்தெடுப்பதன் மூலம் எததையும் சாதிக்க முடியாதென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .