2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தபாலகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 நவம்பர் 26 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகரைப் பிரதேச கட்டுப்பாட்டுத் தபாலகம், அடிப்படை வசதிகள் ஏதுவுமில்லாத நிலையில் இயங்கி வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தபாலகம், நவீனமயப்படுத்தப்பட்ட கட்டடங்களைக் கொண்டுள்ளதாக, 2014ஆம் ஆண்டு முதல் புதிய கட்டடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது.      

இருந்தபோதும், இதுவரை வெளித் தபால் பெட்டிகளோ, பெக்ஸ் வசதியோ, அமர்வதற்கான இருக்கைகளோ இன்றிச் செயற்பட்டு வருவது தமக்கு பெருத்த அசௌகரியத்தை அளிப்பதாக, வாகரை பிரதேச முதியோர் சம்மேளன பொதுச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார்.

முதியோர் உட்பட கைக் குழந்தைகளுடன் தபாலகத்தை நாடி வரும் பெண்களும், பொதுமக்களும் தபாலகத்தின் படிக்கட்டுகளிலும், தரையிலும் அமர்ந்திருக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்தபால் நிலையத்துக்கு வெளியில் தபால் பெட்டிகள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கவில்லை. அதேவேளை, தபால் நிலையத்துக்கு உள்ளே வைக்கப்பட்டிருக்கும் தபால் பெட்டியில் தபால் நிலையம் திறந்திருக்கும் அலுவலக நாள்களில் மாத்திரம்  பெட்டியில் தபால்களைப் பொதுமக்கள் இட முடியும்.

விடுமுறை நாள்களிளோ அலுவலக நேரத்துக்கு முன்னராகவோ, அலுவலகம் முடிந்த நேரங்களிலோ தபால்களை இடுவதற்கான எந்தவொரு வசதியும் இங்கில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து தாம் பல தடவை தபாலக அதிகாரிகளுக்கு எடுத்துரைத்ததாகவும் ஆனால், தீர்வு காணப்படாத குறைபாடுகளாக அவை வருடக்கணக்கில் தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, தமது நலன் கருதி, இந்த விடயம் குறித்து அஞ்சல் திணைக்கள அதிகாரிகள் அக்கறை எடுக்க வேண்டுமென, வாகரைப் பிரதேச பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X