2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்காலம் நெருங்கி விட்டது’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்காலம் நெருங்கி விட்டதாக முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயக மூர்த்தி முரளிதரன் இன்று(13)தெரிவித்தார்.

 

சுயேட்சைக்குழுவாக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி வாழைச்சேனை பிரதேச சபைக்காக வேட்பு மனுவை இன்று (13) மட்டக்களப்பு கச்சேரியில்        தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தியை வெளியிட்டு வருவதுடன் அவர்கள் போகுமிடமெல்லாம் தமிழ் மக்கள் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர்களை நியமிப்பதில் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலத்த சவால்களை எதிர் நோக்கியுள்ளது. வேட்பாளர்களை தேடி அலைந்து திரிகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தமிழ் மக்களை ஒன்றுப்படுத்த முடியவில்லை. தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வையும் இவர்களால் ஏற்படுத்த முடியவில்லை.

இதனால் தமிழ் மக்களிடம் போவதற்கு இவர்கள் அச்சப்படுகின்றனர்.

இந்த நிலையில்தான் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் புதிய அரசியல் கட்சியினை ஆரம்பித்து நாம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியுள்ளோம். அதற்காகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 உள்ளுராட்சி மன்றங்களில் நாம் சுயேட்சைக்குழுவாக போட்டியிடுகின்றோம்.

இந்த தேர்தலில் நிச்சயமாக நாம் வெற்றிபெறுவோம். தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்;து வருகின்றனர். அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுக்காலம் நெருங்கி விட்டது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .