2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தமிழ் மக்களின் எதிர்ப்பையடுத்து விழா இரத்து

Editorial   / 2018 ஓகஸ்ட் 04 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கல்முனை பொது மயான வீதி மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் தேசிய கட்டிட நிர்மான ஒப்பந்தக்காரர்கள் அமைப்பின் கல்முனை கிளை அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று (04) 04.08.2018 நடைபெறவிருந்த நிலையில், அப்பிரதேச தமிழ்ப் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இரத்துச் செய்யப்பட்டது.

கல்முனையில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசத்தில் இவ்வலுவலகத்துகக்கான கட்டிடம் அமைக்கப்படவிருந்தது.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கட்டிட நிர்மான ஒப்பந்க்காரர்கள் அமைப்பின் தலைவர் அத்துல பிரியந்த கலகொட ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைக்கவிருந்தனர்.

எனினும், பிரதேச தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கடும் எதிர்ப்பையடுத்து அடிக்கல் நாட்டு விழா இடைநிறுத்தப்பட்டது.

இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், சந்திரசேகரம் இராஜன், கே. சிவலிங்கம் ஏ.ஆர். செலஸ்றினா கல்முனை விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்தின தேரர் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், இது தொடர்பாக கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயராளர் எம்.எம். முஹம்மத் கனி, கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே. லவநாதன் ஆகியோரது கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, அடிக்கல் நாட்டும் வைபவம் இடைநிறுத்தப்பட்டது.

இவ்வடிக்கல் நாட்டு விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட், பெயர்பலகையும் நாட்டப்பட்டு, பொதுக் கூட்டத்துக்கான மேடைகளும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .