Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 23 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான அலுவலகம் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரனினால் நேற்றுமுன்தினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த வைபவத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் நிர்வாக உப செயலாளர் எஸ். சோமசுந்தரம், நிர்வாக உப செயலாளரும் கிளிநொச்சி மாவட்ட குழு உறுப்பினருமான ஆலாலசுந்தரம், சட்டவிவகார உப செயலாளர் ரூபா சுரேந்தர், மகளிர் அணி உப செயலாளர் இளவேந்தி நிர்மலராஜ், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அன்ரனி கெப்ரியல், வவுனியா மாவட்ட அமைப்பாளர் செ.சிறிதரன், ஊடகம் மற்றும் செயற்றிட்ட ஆக்கத்திற்கான உப செயலாளர் த.சிற்பரன், இளைஞர் அணி இணைப்பாளர் கிருஸ்ணமீனன், தொகுதி அமைப்பாளர் இரா.மயூதரன், கணக்காளர் ராஜாதுரைசிங்கம் மற்றும் ஊடக உதவியாளர் எம். சதீஸ் உள்ளீட்ட பலரும் கலந்துகொண்டனர்.மட்டக்களப்பு மாமாங்கம் சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள 51/7 இலக்க கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 Apr 2024
17 Apr 2024