2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வாழ்த்து

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

எதிரும் புதிருமான  உணர்வுகள் பயணிப்பதானது  நல்லிணக்கத்துக்கு பொதுவான தொரு தேசிய உணர்வைக் கட்டியெழுப்புவதில் ஒரு தடங்கலாக இருக்கக் கூடும். இதற்கான காரணத்தினை அறிந்து அதற்குரிய காரியத்தைச் செய்வாராக இருந்தால் எதிர்காலத்தில் ஒரு சாதனை படைத்த ஜனாதிபதியாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்   ஶ்ரீநேசன் இவ்வாறு தெரிவித்தார்,
மேலும் கருத்து  தெரிவிக்கையில்,
 

தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்தன. அதன் அடிப்ப டையில் கோட்டாபய ராஜபக்ஷ 7வது ஜனாதிபதியாகப் பதவியேற்க இருக்கின்றார்.  ஜனநாயக விழுமியங்க ளுக்கமைவாக பதவியேற்கின்ற போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அடிப்படையில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேவேளையில் அவர் கூறிய கருத்துகளையும் மனதில் பதிவு செய்து வைத்திருக்கின்றேன்.
அதாவது, இந்தத் தேர்தல் வெற்றி, கண்ணியமாகவும், ஒழுக்கமாகவும் பேணப்பட வேண்டும் என்ற கருத்தைச் சொல்லியிருக்கின்றார். இதனைச் சகலரும் காதிலேற்றிச்  செயற்படுவார்கள் என்று நினைக்கின்றேன்.

அதே போன்று சகல இன மக்களுக்குமான ஒரு ஜனாதிபதியாகச் செயற்படுவேன். இனவாதம், குலவாதத்துக்கு அப்பாற்பட்டவனாகப் பணியாற்றப் போகின்றேன் என்று கூறியிருக்கின்றார். இந்தக் கருத்தையும் நான் வரவேற்கின்றேன். கடந்த காலத்தில் சந்தேகங்கள், பீதிகள் காணப்பட்டன. அந்த அடிப்படையில் அல்லாமல் சகல மக்களுக்கும் பொதுவான ஜனாதிபதியாகச் செயற்படப் போகின்றேன் என்று கூறியிருக்கின்றமையை வரவேற்கின்றோம். வாழ்த்துகின்றோம்.  

அதே நேரத்தில் தேர்தல் வெற்றியை பழிவாங்கலுக்குரிய வெற்றியாக யாராவது கடைப்பிடிப்பார்களாக  இருந்தால் ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய நன்மதிப்பில் குறைவு ஏற்படும் என்பதையும் இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 அதே வேளை தேர்தல் வன்முறைகள் குறைந்த தேர்தலாக நடந்து முடிந்திருக்கிறது. நாங்கள் தேர்தல் ஆணையத்தினைப் பாராட்டத்தான் வேண்டும். அதே போன்று கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு, 80 வீதத்துக்கு அதிகமான மக்கள் தனக்கு   வாக்களித்து விட்டார்கள் என்றோ, 10 - 15 வீதமானவர்கள் தான் தனக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்றோ அவர் இதில் ஆத்திரப்பட்டு, ஆக்கிரோசப்பட்டு ஒரு எதிர்ப்பு ரீதியான அரசியலைச் செய்யமாட்டார் என்று நம்புகின்றேன்.

தனக்கு வாக்களித்த, வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துத்தான் பணியாற்றவிருப்பதாகச் சொல்லியிருக்கின்றார். இது இவர் கடந்த காலத்தில் பெற்ற ஒரு படிப்பினையாகக் கருதுகின்றேன். ஆகவே இந்த வேளையில் தமிழ்த் தேசிய உணர்வு, சிங்கள மக்களின் பெருந்தேசிய உணர்வு என்பது இரண்டும் எதிரும் புதிருமான முரண் திசையில் நகர்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .