2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தரமற்ற பழச்சாறுகள் கைப்பற்றல்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

பாவனைக்குதவாத வகையில் குறைந்த தரத்தில் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1,146 பழச்சாறு போத்தல்களை, மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது கைப்பற்றியுள்ளதாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.

பானம் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றால் தயாரிக்கப்பட்ட இப்பானங்களில் சுகாதார அமைச்சால் பரிந்துரைக்கப்பட்ட அளவிலான நிறமூட்டிகள்  சேர்க்கப்படாமையே இதற்கான காரணமாகும்.

கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகரும் கல்லடி பொது சுகாதார பரிசோதகர் எஸ்.அமிர்தாப் ஆகியோரும் நேற்று (14)  இந்தச் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போத்தல்கள், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நாளை (16) பாரப்படுத்தப்படவுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .