2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தாய்லாந்து, இந்தியா பேராசிரியர்கள் மட்டக்களப்புக்கு வருகை

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 ஏப்ரல் 02 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தாய்லாந்தின் பல்கலைக்கழகமான பதும்தனி பல்கலைக்கழகமும் தென்னிந்தியாவின் எஸ்.எஸ்.எம் கல்லூரியும், தங்களுடைய கல்வி சேவையை மாறிவரும் உலகுக்கேற்ப இலங்கையில் வழங்க முன்வந்துள்ளன.

இதற்கமைய, குறித்த பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்து, அந்தப் பல்கலைகழகங்களின் கல்வியை, மட்டக்களப்பு மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பாகக் கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடல், Blue Sky Campus மாநாட்டு மண்டபத்தில், நேற்று (01) இடம்பெற்றது.

தாய்லாந்து பதும்தனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் நித்திமா யென்யொங் உட்பட அனைத்து துறைசார் பொறுப்பதிகாரிகளும் இந்தியாவின் எஸ்.எஸ்.எம். கல்லூரியின் தலைவர் பேராசிரியர் மதிவாணன் சுப்ரமணியன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

கல்வி முகாமைத்துவம், கணினித் தொழில்நுட்பம், சுற்றுலா, விருந்தோம்பல், மேலாண்மை போன்ற துறைகளில், இளமானி, முதுமாணி கற்கை நெறிகள் வழங்கப்படவுள்ளதாக, தாய்லாந்து, இந்தியா பேராசிரியர்கள் இங்கு தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X