2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேக்கு மரக்குற்றிகள் மீட்பு

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஜனவரி 14 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பிரதேசத்தில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை, ஏறாவூர்ப் பொலிஸார், இன்று (14) அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.

 

மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள், பொலிஸாரைக் கண்டதும் மரக்குற்றிகளையும் சைக்கிள்களையும் கைவிட்டுத் தப்பியோடியதாக, ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

6, 11 அடி  நீளங்களாக அறுக்கப்பட்ட  40 தேக்கு மரக்குற்றிகளும் 2 சைக்கிள்களுமே பொலிஸாரால் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

வந்தாறுமூலை -  உப்போடை வயற்பிரதேச வீதியில்  பதுங்கியிருந்த ஏறாவூர்ப் பொலிஸ் குழுவினர், இம்மரக்கடத்தலை முறியடித்துள்ளனர்.

மட்டக்களப்பு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்   சமன் யட்டவரவுக்குக்கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பிராந்திய ஊழல் மோசடி தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி டப்ளியுஎம்ஜே. மதுசங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

சந்தேகநபர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் நடைபெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X