2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தேசிய தொளஹீத் ஜமாஅத் இன் பள்ளிவாயல் மூடப்பட்டது

Editorial   / 2019 மே 02 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்  

 

தேசிய தௌஹீத் ஜமா அத்  தடை செய்யப்பட்டதையடுத்து, காத்தான்குடியில் செயற்பட்டு வந்த அவ் அமைப்பின் பள்ளிவாயல் மற்றும்  அமைப்பின் அலுவலகம் என்பன மூடப்பட்டுள்ளன.

குறித்த பள்ளிவாயல் மூடப்பட்டுள்ள நிலையில்,  யாரும் உட் செல்லமுடியாதவாறு பொலிஸார் கண்கானிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பள்ளிவாயலின் முன்பாக,  இரண்டு பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளதுடன் கண்கானிப்பு நடவடிக்கையிலும்  ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தற்போதைய தலைவர் மௌலவி எம்.வை.எம்.தௌபீக், அதன் பொருளாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனைர். இந்நிலையில், ஜமா அத்தின் வங்கிக் கணக்கு விவரங்கள், அதன் கடந்த கால செயற்பாடுகள் குறித்தும், அங்கத்தவர்கள் விவரம் குறித்தும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .