2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘நயவஞ்சமான நடவடிக்கைகளை முறியடிக்க வேண்டும்’

Editorial   / 2020 ஜூலை 22 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளைச் சிதறடித்து, எமது பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கான இனவாதக் கட்சிகளின் பிரித்தாளும் நயவஞ்சமான நடவடிக்கைகளை முறியடிப்பற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டுமென, ஈரோஸ் ஜனநாயக முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க தமிழ் பேசும் மக்கள் ஒன்றினைய வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆதரவு என்ற தலைப்பில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இ.சிறிஇராஜராஜேந்திரா கையொப்பமிட்டு, வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழரது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கவும் எதிர்வரும் 2020 ஆவணி மாதம் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி தனது பூரண ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது.

வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட இலங்கையின் சகல பாகங்களிலும் வசிக்கும் தழிழ் பேசும் மக்கள்சர்வதேசநியமங்களுக்கேற்ப உரிமைகளைப் பெற்று சமாதானத்துடனும், சந்தோசமாகவும் வாழக்கூடிய வகையில் அவர்களது சிவில், அரசியல்தமிழர் தலமைகளின் ஒற்றுமையை உணர்ந்து ஈழப்பரட்சி அமைப்பு ஈரோஸ் (EROS) தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE) போன்ற 04 பிரதான இயக்ககங்களும் ஒன்று சேர்ந்து ஈழதேசிய விடுதலை முன்னணி(ENFL) என்ற அமைப்பை 1984 ஆம் ஆண்டு உருவாக்கிக் கொண்டன.

“இச்செயற்பாட்டினை எமது ஈரோஸ் இயக்கமே முன்னின்று செயற்படுத்தியது. இவ் ஈழதேசிய விடுதலை முன்னணியானது தமிழர்களின் ஒற்றுமையை உலகிற்கு அறியவைப்பதற்கே உருவாக்கப்பட்டது.

“அதேவேளை, எமது ஈரோஸ் இயக்கமானது 1985, 1986 காலகட்டத்தில் போராட்ட இயக்கங்களிடையே மோதல்கள் ஏற்பட்ட வேளை மோதல்களை நிறுத்தி சமாதானமாக செல்ல வேண்டுமென அறிக்கை வெளியிட்டது.

“2009 இல் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தேசியத்தின் குரல் நலிவடைந்து போய்விட எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில் அப்போது தேசியத்தின் குரலாய் ஒலித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே நாம் நமது ஆதரவை வழங்கி வந்தோம்.

“அதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கடந்தகால செயற்பாடுகளில் அவர்கள்பற்றிய ஆரோக்கியமான விமர்சனங்களை நாம் அவ்வப்போது முன்வைப்பதற்கு என்றைக்கும் தயக்கம் காட்டியதில்லை. எமது அமைப்பானது நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த எந்த கட்சிக்கும் ஆதரவு வழங்குவதற்கான முடிவை எடுத்திருக்கவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

“சில இனவாதக்கட்சிகள் பிரித்தாளும் நோக்குடன் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடித்து எமது பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு சிறுசிறு குழுக்களையும் சில அரசியல் கட்சிகளையும் பயன்படுத்துகின்றது. இத்தகைய நயவஞ்சமான நடவடிக்கைகளை முறியடிப்பற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டுமென ஈரோஸ் ஜனநாயக முன்னணி கேட்டுக்கொள்கின்றது” எனக் குறிப்பிடப்பட்டள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X