2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நல்லிணக்க நினைவூட்டல் ஓவியக் கண்காட்சி

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், நடராஜன் ஹரன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் நல்லிணக்க நினைவூட்டல் ஓவிய ஆக்கப் படைப்புகளின் கண்காட்சி, உண்மை மற்றும் நல்லிணக்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில், எதிர்வரும் 18ஆம் தகிதி நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, கிளிநோச்சி, அநுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த 18 பெண்களின் கதைகள், ஓவியங்களாக இக்கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

இதில் தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூவினங்களையும் சேர்ந்த பெண்கள் பங்குபற்றுகின்றனர்.

தான் அல்லது தாம் மாத்திரமே பாதிக்கப்பட்டதாக இருக்கும் ஒவ்வொருவருடைய சிந்தனைகளிலும் ஏற்படும் மாற்றம், அனைத்து இன மக்களிடையேயுமான நல்லிணக்கம் ஏற்பட வழியை ஏற்படுத்தும் என்ற நோக்கத்தில், மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதற்கான முயற்சியாக, மாவட்டங்கள் தழுவிய வகையில், இக்கண்காட்சி நான்காவதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட இணைப்பாளரான வடிவேல் ரமேஸ்ஆனந்தன் தெரிவித்தார்.

இக்கண்காட்சி, திருகோணமலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .