2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாளை வருமாறு பணிப்பு

வா.கிருஸ்ணா   / 2019 மே 13 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு வவுணதீவில், இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தனை, நாளை (14) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி, வவுணதீவு காவலரணில் காவலில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.  

இது தொடர்பில் முன்னாள் போராளி அஜந்தன் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அஜந்தன், தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தார்.  

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானின் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டு, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், வவுணதீவு பொலிஸாரை, சஹ்ரான் குழுவினரே கொலைசெய்ததாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.  

இதையடுத்து, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் அஜந்தனை விடுதலைசெய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தத்கு அமைவாக, கடந்த சனிக்கிழமை (11) காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.தியாகேஸ்வரன் முன்னிலையில், பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால், அஜந்தன் ஆஜர்படுத்தப்பட்டார்.  

இதன்​போது, அஜனந்தனை பிணையில் விடுதலை செய்த பதில் நீதவான், அவரை 13ஆம் திகதி (இன்று), நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டிருந்தார்.  

இந்நிலையில், நேற்று, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றுக்கு அஜந்தன் ஆஜராகியிருந்த நிலையில், நேற்றைய தினமும், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதிபதியே கடமையில் இருந்தமையால், அவரை, நாளை நீதிமன்றுக்குச் சமூகமளிக்குமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .