2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘நாளைய தலைமுறை’ நூல் வெளியீடு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளைஞர் சக்தியை வெளிக்கொண்டுவந்து அவர்களை, நாட்டின் வளமாக உருவாக்குவதற்கு உதவிய இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்களைப் பற்றிய விவரத் திரட்டு நூல், ஏறாவூரில், நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (30) வெளியிடப்படவுள்ளதாக, ஸ்ரீ லங்கா 'ஷெட்' நிறுவனத்தின் தலைவர் கே. அப்துல் வாஜித் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், நாட்டை வளப்படுத்துவதில் இளைஞர், யுவதிகளின் பங்குபற்றல் என்பது அளப்பரிய சக்தியாகும். அதனை வெளிக்கொண்டுவருவதற்கு இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள் பெரும் பங்களிப்புச் செய்திருக்கின்றார்கள் என்றார்.

எனவே, அத்தகைய பங்களிப்புச் செய்த சேவையாளர்களைச் சரித்திரத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக கடந்த யுத்த காலத்துக்கு முன்னரும் யுத்த காலத்திலும் தற்போது வரையிலும் சேவையாற்றியுள்ள இளைஞர் சேவை உத்தியோகத்தர்களின் விவரங்களைத் திரட்டி, 'நாளைய தலைமுறை' என்ற பெயரில்  நூலுருப் பெறச் செய்துள்ளோம்.

ஏறாவூர்ப் பிரதேசத்தில் தங்களை அர்ப்பணித்து சேவையாற்றிய தமிழ், முஸ்லிம் இளைஞர் சேவையாளர்களின் விவரங்கள், இந்த நூலில்  இடம்பெற்றுள்ளனவெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .