2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நாவலடி முகத்துவாரத்தை தோண்டும் முயற்சி கைவிடப்பட்டது

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜூன் 10 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் நெற்​செய்கையில் நிறைந்துள்ள ​வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக, நாவல​டி முகத்துவாரத்தைத் தோண்டும் முயற்சி, ஆரம்பிக்கப்படாமலேயே கைவிடப்பட்டது.

பயிர் நிலங்களிலுள்ள நீரை வெளியேற்றுவதற்காக, மட்டக்களப்பு கல்லடி நாவலடி முகத்துவாரத்தை வெட்டி, நீரைக் கடலுக்கு அனுப்புமாறு, சில விவசாயிகளால், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசனிடமும் மாவட்ட செயலாளரிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், மட்டக்களப்பு கல்லடி நாவலடி முகத்துவாரத்தைத் தோண்டுவது தொடர்பில் ஆராய்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன், அதிகாரிகள் உள்ளிட்டோர், மட்டக்களப்பு கல்லடி நாவலடி முகத்துவாரப் பகுதிக்குச் சென்று, அங்கு நிலைமைகளை ஆராய்ந்தனர்.

எனினும், கடல் மட்டம் தாழ்ந்து, வாவியின் மட்டம் உயர்ந்திருந்திருந்தால் மாத்திரமே, முகத்துவாரத்தை வெட்டி, வாவியின் மேலதிக நீரைக் கடலுக்கு அனுப்ப முடியும் என்றும், இங்கு வாவியின் நீர் மட்டம் தாழ்ந்திருப்பதால், முகத்துவாரத்தை வெட்டுவதற்கானச் சாத்தியப்பாடுகள் இல்லை என்றும் இதன்போது முடிவெடுக்கப்பட்டதோடு. அதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என்பதால், அதை வெட்டும் நோக்கம் கைவிடப்பட்டதெனவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X