2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு விழா

Editorial   / 2019 ஜனவரி 18 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிந்தவூரில் 20 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்தியசாலை, கல்முனை பிராந்திய ஆயுர்வேத திணைக்கள இணைப்பாளரும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியேட்சகருமான டொக்டர் எம்.நபீல் தலைமையில் நாளை மறுதினம் (20) திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி  திருமதி ஆர்.சிறிதர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல்.அலாவுதீன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X