2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘நீதித்துறை அவமதிப்பு கண்டிக்கத்தக்கது’

Editorial   / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா

பௌத்த  தேரரின் பூதவுடல், நீதிமன்ற தீர்ப்பையும் மீறி, முல்லைத்தீவு, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கேணியின் அருகில் தகனம் செய்யப்பட்டமை கண்டிக்கத்தக்க செயல் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பையும் புறந்தள்ளிவிட்டு, நீதித் துறையை அவமதிக்கும் வகையில், சட்டத்தரணிகளைத் தாக்கி, ஞானசாரர் தலைமையிலான பிக்குமார் இச்செயலை செய்துள்ளமை நீதித்துறையையும் தமிழ், இந்து மக்களையும் அவமதிக்கும் செயல் எனவும் அவர் மேலும் தெரிவித்தர்.

இதேவேளை, மேற்படி செயல், நாட்டில் வாழ்கின்ற இந்துக்களின் மத்தியில்  பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், சட்டத்தின் அடக்குமுறையால் வட, கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாக்கபடுகின்றனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

தமிர்களையும் தமிழர்களின் வழிபாட்டுத் தளங்களையும் கேவலப்படுத்தும் வேலைகளை ஒருசில தேரர்கள் அரங்கேற்றியமை, ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிரான வன்மைமுறையாகவும் தமிழர்களை அடக்கியாளும் செயற்பாடாகவுமே தன்னால் பார்க்கப்படுவதாகவும் வியாழேந்திரன் எம்.பி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X