2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘நுண்கடன் திட்டத்தில் இருந்து விடுபடுங்கள்’

Editorial   / 2018 மே 29 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மக்களை கடனாளியாக்கும் நுண்கடன் நிதி நிறுவனங்களின் கடன் திட்டத்தில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும் என, இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் சாணக்கியன் தெரிவித்தார்.

திங்கட்கிழமை (28)  காலை பழுகாமத்தில் வாழ்வாதார உதவி வழங்கி வைத்துவிட்டு, கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போது வடக்கு, கிழக்கில் பல நுண்கடன் நிதி நிறுவனங்களின் உள்நுழைவு அதிகமாக காணப்படுகின்றது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீட்சி பெற்று வருகின்ற இந்த வேளையில் இவ்வாறான நிதி நிறுவனங்களின் நடவடிகக்கைகள் மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

இம்முறையில் அதிகளவு பெண்களே ஈர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் சுயதொழிலுக்கு என்னும் பெயரில் கடனை பெற்று அநாவசியமாக செலவழித்து விட்டு, அக்கடனை நிவர்த்தி செய்ய மேலும் பல கடன்களை தொடர்ச்சியாக பெற்றுவருகின்றமையினால், இறுதியில் அனைத்தும் இணைந்து கழுத்தை நெருக்கும் அளவுக்கு மரணத்தின் வழிக்கு அனைவரையும் இட்டுச் செல்கின்றது.

ஆகவே, இவ்வாறான கடனைப் பெற்றால் அவற்றை பிரயோசமான முறையில் பயன்படுத்தி, அதில் இருந்து அபிவிருத்தி அடைய வேண்டும். இல்லாவிடின் அதனை பெறாமல் வேறு வழியில் சுயதொழிலை  பெற்று வாழ்வாதாரத்தை அதிகரிக்க வேண்டும்.

இதில் கிராமமட்ட அமைப்புகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இவ்வமைப்புகளின் சேமிப்பில் பல இலட்சம் தொகை உள்ளது. இவர்கள் மக்களுக்கு வட்டியில்லாக் கடன் அல்லது மிகவும் குறைந்தளவிலான வட்டி வீதத்தில் கடனை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்க செய்ய வேண்டும்.

இன்று இந்த நுண்கடன் திட்டத்தால் பல தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமையை அனைவரும் அறிவோம். எனவே, இந்த நுண்கடன் திட்டத்தில் இருந்து விடுபடுங்கள் எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .