2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘நெற்செய்கைக்கு நீர் வழங்காவிடின் கவனயீர்ப்பு’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஜூன் 25 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள நெற்செய்கை காணிகளுக்கு நீர் வழங்காவிடின் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைமை ஏற்படுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா விவசாய சம்மேளன தலைவர் ஐ.எல்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள முள்ளிவட்டவான், அடம்படி வட்டவான், மக்கிளானை  பருத்திச்சேனை மற்றும்  ஒட்டுவெளி போன்றனவற்றில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.

“வாகனேரி குளத்திலிருந்து உரிய காலத்தில் சரியான நீர்ப்பாசனம் கிடைக்காத காரணத்தால் சுமார் 25 சதவீதமான ஏக்கர் விவசாயக் காணி நெற் செய்கை பண்ணப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 500 விவசாயக் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

“அந்த விவசாயக் குடும்பங்களின் வழ்வாதாரம் இதனால் முற்றாக இழக்கப்பட்டு, மிகவும் சிரமங்களை இவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

“இது தொடர்பாக பல அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்தும் இதுவரை எமக்கான தீர்வு கிடைக்கப் பெறவில்லை.

“2017ஆம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை தொடர்பான கூட்டம், கிரான் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது, இந்த நெற்செய்கை காணிகளுக்கு நெற்செய்கைக்கான நீர்ப்பாசம் வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டது.

“ஆனால், நீர்ப்பாசனம் வழங்கப்படவில்லை. இந்த நெற்கை காணிகளுக்கு நீர்ப்பாசனம் வழங்கப்படாததால் அந்தக் காணிகள் வரண்டு போய் உள்ளதுடன் மாடுகள் மேயும் மேய்ச்சல் நிலங்களாக மாறி வருகின்றன.

“இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் நீர்ப்பாசனத்திணைக்களத்துக்கெதிராக நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகள், ஜனநாயக ரீதியான கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட வேண்டி ஏற்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .