2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படாத பட்டதாரிகள் குழப்பமடைய தேவையில்லை’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“வேலையற்ற பட்டதாரிகளை, பட்டதாரிப் பயிலுநர்களாக ஆட்சேர்ப்பு செய்வதற்காக நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படாத பட்டதாரிகள், எவ்வித குழப்பமும் அடையத் தேவையில்லை” என்று, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ம.உதயகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

“2017.08.06ஆம் திகதி பத்திரிகை விளம்பத்தின் அடிப்படையில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், அந்த விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து, மாவட்ட செயலகத்தில் கையளிக்கும் படியும் அவர்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கான பொருத்தமான திகதி அரசாங்க அதிபர் அல்லது மேலதிக அரசாங்க அதிபரால் அறிவிக்கப்படும்.

“நேர்முகப்பரீட்சையில் கலந்துகொள்ளும் பட்டதாரிகளிடம் மொழித் தேர்ச்சி, கணினி அறிவு, மேலதிக கல்வித் தகமையும் ஏனையவையும், விடயத்துக்குப் புறம்பான செயற்பாடுகள், நேர்முகப் பரீட்சையின் போது காட்டப்படும் திறமைகளும் செயற்பாடுகளும் பரீட்சிக்கப்படும்.

“இவைகளுக்காக தனித்தனியே 20 புள்ளிகள் வழங்கப்பட்டு, மொத்தம் 100 புள்ளிகள் கணிக்கப்படும்.

“இதில், 31.12. 2016 அல்லது அதற்கு முன்னராக அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டத்தைப் பெற்றவர்களாகவும் 08.09.2017 அன்று 21 வயதுக்குக் குறையாமலும், 35 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் அவசியம்.

“பெயர் மாற்றங்கள் தொடர்பான விடயங்கள் ஏதாவது இருப்பின் அதனை சத்தியக்கடடதாசி மூலமாக உறுதிப்படுத்துவது அவசியமானதாகும்” என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளை, பட்டதாரிப் பயிலுநர்களாக 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான நேர்முகப்பரீட்சைகள், எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 30ஆம் தகதி வரையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் இதற்கான அழைப்புகள் பட்டதாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பத்திரிகை விளம்பரங்களின் ஊடாக கடந்த 06.08.2017 முதல் 08.09.2017 வரையான ககாலப்பகுதியினுள் விண்ணப்பித்த 31.12.2016 வரை பட்டங்களைப் பெற்றுக்கொண்ட 2,598 பட்டதாரிகள் இந்த நேர்முகப்பரீட்சைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

பட்டதாரிகள், அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டச் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ், ஏனைய சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டை, வதிவிடத்தை உறுதிப்படுத்தும் பிரதேச செயலாளரின் அறிக்கை, வேலையற்ற பட்டதாரி என்பதனை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களுடன் நேர்முகப்பரீட்சைக்கு சமுகமளிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .