2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நோன்பு காலத்தில் வீதிகளுக்கு மின் விளக்கு

Editorial   / 2018 மே 22 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, அரசடி 10ஆம் வட்டாரத்திலுள்ள சோனகர் தெரு, கொலன் தெரு ஆகிய வீதிகளுக்கு மின் விளக்குப் பொருத்தும் நடவடிக்கைகள் செவ்வனே செய்து முடிக்கப்பட்டுள்ளனவென, பிரதேச முஸ்லிம்களும் பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் தெரிவித்துள்ளனர்.

தற்சமயம் புனித ரமழான் நோன்புக் காலம் ஆரம்பித்துள்ள நிலையில், நீண்டகாலமாக இருளில் மூழ்கிக் கிடந்த அந்த வட்டாரத்தில், இரவு நேரத் தொழுகைக்கும் இதர வணக்க வழிபாடுகளுக்கும் செல்வதற்குப் பெரும் சிரமம் ஏற்பட்டிருந்தது.

இதனைக் கருத்திற்கொண்டு, தெருக்களில் அசௌகரியமின்றிச் செல்வதற்கு வசதியாக இருளில் மூழ்கிக் கிடக்கும் உள் வீதிகளுக்கு மின் விளக்குகளைப் பொருத்தித் தருமாறு பிரதேசவாசிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அதன் நிமித்தம், வேண்டுகோள் விடுக்கப்பட்ட சற்று நேரத்திலேயே நேற்று (21) உரிய பகுதிக்கு நேரடியாகச் சென்று, பள்ளிவாசல் நிர்வாகத்தினருடம் கலந்துரையாடி, மின் விளக்குகளைப் பொருத்தி ஒளிரச் செய்யும் நடவடிக்கையில் சிவம் பாக்கியநாதன் ஈடுபட்டார்.

இதனைப் பாராட்டியுள்ள அப்பகுதி முஸ்லிம்கள், “இது தேவையறிந்து சேவை செய்யும் மனப்பாங்கு கொண்டவர்களின் இன ஒற்றுமைக்கான எடுத்துக் காட்டு” என்று கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .