2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பக்கச்சார்பான நிதியொதுக்கீடு தொடர்பில்; ஆட்சேபனை வேலைத்திட்டம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி அமைச்சும் நகர அபிவிருத்தி அதிகார சபையும்  பக்கச்சார்பாக நிதியொதுக்கீடு செய்யும் செயற்பாடு தொடர்ந்த வண்ணம் இருந்தால், இதைத் தடுத்து நிறுத்துவதற்கான ஆட்சேபனை வேலைத்திட்டங்கள் தம்மால் மேற்கொள்ளப்படுமென, கிழக்கு மாகணசபை முன்னாள் உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.

 இதை இன ரீதியாகவோ அல்லது கட்சி ரீதியாகவோ உற்றுநோக்கக்கூடாதெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.  

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் கட்சி அங்கத்தவர்கள் மத்தியில் நேற்று (15) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது, கடந்த காலங்களில், உள்ளூராட்சி அமைச்சினாலும், நகரஅபிவிருத்தி அதிகார சபையினாலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் உள்ளூராட்சி சபைகள் புறக்கணிக்கப்பட்டமையின் காரணத்தால் அவை வலுவிழந்த உள்ளூராட்சி சபைகளாக இருந்து வந்ததாகக் குறிப்பிட்டார்.

இச்செயற்பாட்டை, உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் தமிழ்ச் சமூகம் கிராம ரீதியாக, அரசியல் உரிமை தொடர்பாகவும், அபிவிருத்தி தொடர்பாகவும் பட்டிதொட்டிகள் எல்லாம் பேசுகின்ற அளவுக்கு   வலுவிழந்த நிலையில் நடப்பது வருத்தத்துக்குரிய விடயமாகுமென, அவர் தெரிவித்தார்.

ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள எல்லைக் கிராமங்களில் 15 கிராம மக்கள் 10 ஆண்டுகளாக யானைகளால் துன்பப்படும் நிலையிலும், தொடர்ச்சியாக மத்திய அரசாங்க அமைச்சின் ஊடாக ஒதுக்கப்படும் நிதிகள் பக்கச்சார்பாக ஒதுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அதேபோன்று, உன்னிச்சைக் குளத்திலிருந்து நீரை எடுத்து, ஆயித்தியமலை சந்தி வரையும்  தமிழ் மக்கள் குடிப்பதற்கு நீரின்றிப் பரிதவிக்கின்ற வேளையில், நிரந்தரமாகக் குடிநீரை வழங்காமல் ஏனைய பகுதியான ஓட்டமாவடிப் பகுதிகளுக்கு நீரைக் கொண்டு செல்வதில், நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அயல் கிராமமான நாசிவன்தீவு கிராமத்தில் வாழும் மக்கள் (உப்புத்தண்ணீர்) உவர்நீர் அருந்தும் நிலை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பெரியபுல்லுமலை கிராமம் நிலத்தடி நீரின்றி வரட்சி ஏற்படுகின்ற பிரதேசத்தில் குடிதண்ணீர் விற்பனை செய்யும் அளவுக்குத் திட்டத்தை தயாரித்தலும் இதுபோன்ற மோசமான, பக்கச்சார்பானதொரு செயற்பாடுகளை செய்து வருவதை அரசாங்கம் நிறுத்தவேண்டுமென்றும் இது தொடரப்படுமானால், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் நிலை கவலைக்கிடமாக மாறுமென்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, மேற்குறிப்பிட்ட தவறானப் பொருளாதாரக் கொள்கை, நிதியொதுக்கீடு, காணிப் பகிர்ந்தளிப்பு போன்ற விடயங்களை நிறுத்த, அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .