2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’பதுங்கல் அரசியல் முறை ஒருபோதும் வெற்றியளிக்காது’

பேரின்பராஜா சபேஷ்   / 2017 ஜூன் 25 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஒரு சிலர் தமது அரசியல் தேவைக்காக சிலரைக் குழப்பியடித்து, அவர்களைத் தமது பக்கம்  இழுத்து, அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ், பதுங்கி அரசியல் செய்ய முயற்சி செய்கிறார்கள். இவ்வாறான நிலமை ஒரு போதும் வெற்றியளிக்காது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் கருமாரி அம்மன் ஆலயத்தில் வாயில் கோபுரம் நிர்மானத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு, இன்று (25) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உடைத்துக்கொண்டு வெளியேறி தனியாக போட்டியிடுவதற்கு யாராவது முயற்சித்தால், அவர்கள் தமிழ் மக்களால் தனிமைப்படுத்தப்பட்டு, தோல்வியடைவார்கள் என்பது கடந்த கால வரலாறு.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ), 4 கட்சிகள் இணைந்த ஒரு கட்சியாகும். மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

“கடந்த காலத்தில் தனித்து நின்று போட்டியிட்ட ஒருசில கட்சிகள், ஒரு ஆசனத்தைக் கூட பெற முடியாத நிலை காணப்பட்டது. 2004ஆம் ஆண்டு, த.தே.கூவின் ஒற்றுமையின் விளைவால் 22 ஆசனங்களைப்  பெற்றிருந்த வரலாறுகளும் உண்டு. சில கட்சிகள் தங்களால் முன்பு பெறமுடியாத வெற்றிகளைப் பெறுவதற்கு ஒற்றுமையே காரணமாக இருந்தது. 

“த.தே.கூவை உடைத்து சின்னாபின்னமாக்கி பேரினவாதத்தினருக்கு தீனி போட ஒரு சிலர் விரும்புகிறார்கள். ஒருசில அதிகாரிகள் தமது ஊழல் மோசடிகளை மறைத்துக்கொள்வதற்கு இவ்வாறானவர்களுடன் இணைந்து செயற்படுகிறார்கள். மக்கள், போலிகளை ஒரு போதும் நம்பவேண்டாம்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .