2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பன்சல வீதி ஒரு வழிப் பாதையாக மாற்றம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2020 பெப்ரவரி 17 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைந்துள்ள பன்சல வீதியில் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் விபத்துகளைக் கட்டப்படுத்தும் நோக்கில், ஒரு வழிப் பாதையாக மாற்றும் தீர்மானம், மாநகர சபை அமர்வில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 30ஆவது அமர்வில், சபை மேயர் தி.சரவணபவன் தலைமையில், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது, மாநகரசபையின் உறுப்பினரும் சுகாதார நிலையியற் குழுவின் தலைவருமான சிவம் பாக்கியநாதனால் முன்வைக்கப்பட்ட பன்சலை வீதியை ஒரு வழிப் போக்குவரத்துக்காக மட்டுப்படுத்தும் பிரேரனை, எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குறித்த பன்சலை சந்தியில் போக்குவரத்து சமிக்ஞைப் பலகை பொருத்தப்பட்டு, போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பொலிஸார், குறித்த வீதியின் நெரிசலை கண்டும் காணாததுபோல் செயல்படுகின்றனர் என்றும் குறித்த வீதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளரின் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் பாரிய நெரிசல் ஏற்படுவதாகவும், சிவம் பாக்கியநாதன் இதன்போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .