2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘பிளவை வளரவிட்டால் பொருளாதாரத்துக்கு பெரும் அடியாக இருக்கும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டில் வாழும் சமூகங்களுக்கிடையில் தற்போது பிளவு நிலவுவதாகவும்  அதை அப்படியே வளரவிட்டால், பொருளாதாரத்துக்கும் சமூக அரசியல் செயல்முறைகளுக்கும் பெரும் அடியாக இருக்குமெனவும், இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரெட்ன தெரிவித்தார்.

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டு  வரும் 'இனங்களுக்கிடையில் இணக்கப்பாட்டின் மூலம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல்' எனும் செயற்றிட்டம் குறித்து, அவர் இன்று (14) கருத்துத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார வளர்ச்சிக்கும் அமைதிக்கும் இன விரிசல் பெருத்த சவாலாக இருப்பதால் அது குறித்து உடன் செயற்பாட்டில் இறங்குமாறு செயற்பாட்டாளர்களுக்கு தாம் அறைகூவல் விடுப்பதாகத் தெரிவித்தார்.

இன முரண்பாட்டுச் சூழ்நிலையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளதோடு, சிவில் சமூக அமைப்புகளும் இது தொடர்பாக  தலையிட முடியுமெனத் தெரிவித்த அவர், தொடரும் காலம் தேர்தலுக்கான காலம் என்பதால் அரசியல் பிரதிநிதிகளை இணைத்துக்கொள்வது அவ்வளவு முக்கியமானதாக இல்லை என்பதோடு, அவ்வாறு இணைத்துக் கொள்வது பல்வேறு பிளவுகளுக்கும் வழிவகுக்குமென்றார்.

மேலும், இனங்களுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் வகிபாகம் பெரும் பங்கு வகிக்கின்றன. இதனைப் பொறுப்பு வாய்ந்த ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் தமது பணியை சிறப்பாக நிறைவேற்ற வேண்டுமென, இலங்கை தேசிய சமாதானப் பேரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .