2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாவனைக்குதவாத உணவுகள் மீட்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி நகர சபைப் பிரிவில் நகர சபையும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் இணைந்து, இன்று (05) காலை நடத்திய திடீர் சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோதமான முறையில் காலாவதியான, பழுதடைந்த, பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை வைத்து வியாபாரம் செய்த பல வர்த்தக நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டனவென, பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி யு.எல்.நஸீர்தீன் தெரிவித்தார்.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான பயிற்சி மாணவர்கள் 50 பேர், பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், நகர சபை ஊழியர்கள இணைந்து, ஆறு குழுக்களாகப் பிரிந்து, இத்தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இதன்போது சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .