2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாவனைக்குதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டன

வா.கிருஸ்ணா   / 2019 ஜனவரி 04 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகருக்குட்பட்ட கோட்டைமுனைப் பகுதியில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நேற்று (03) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, பாவனைக்குதவாத பெருமளவு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, பெருமளவான மக்கள் பொருள்கொள்வனவுக்கு மட்டக்களப்பு நகருக்கு வருகைதருவதன் காரணமாக, அவர்களின் நலன்கருதி, இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதனின் ஆலோசனையின் கீழ், கோட்டைமுனை பொதுச் சுகாதர பரிதோகர் வி.சி.சகாதேவன் தலைமையிலான பொதுச் சுகாதார குழுக்கள், இந்தச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இதன்போது, மட்டக்களப்பு பொதுச்சந்தை, அதனை அண்டிய பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள், உணவகங்கள், வெதுப்பகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

இந்தச் சுற்றிவளைப்பின்போது, பெருமளவான காலாவதியான பொருட்கள், சுகாதாரத்துக்கு ஏற்றமுறையில் வைத்திருக்காத பொருட்கள், முறையான வகையில் சுற்றுத்துண்டுகள் இடாத பொருட்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளதாக, பொதுச்சுகாதார பரிசோதகர் வி.சி.சகாதேவன் தெரிவித்தார்.

இதனடிப்படையில், மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதுடன், சில வர்த்தக நிலையங்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .