2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பி.சி.ஆர். மேற்கொள்வதில் அசௌகரியம்

Princiya Dixci   / 2021 மே 04 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

வீடுகளில் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடுகளில் தனிமைப்படுத்தலில் உள்ள நபர்களே இவ்வாறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

குடும்பத்திலுள்ள ஒருவருக்கு கொரோனா வைரஸை் தொற்று ஏற்பட்டு, அவர் சிகிச்சை முகாமுக்கு சென்றதன் பின்னர் சுகாதார பிரிவினர் குடும்ப உறுப்பினர்களை அவர்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தலில் வைத்துச் செல்கின்றனர்.

அவ்வாறு வீடுகளில் தனிமைப்படுத்தலில் உள்ள நபர்களை பி.சி.ஆர். பரிசோதனைகளை பெறுவதற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு அழைக்கின்ற போது அங்கு செல்ல வாகனங்களின்றி பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தாம் தனிமைப்படுத்தலில் இருக்கும் காரணத்தால் வாகன சாரதிகள் எங்களை ஏற்றிச் செல்ல அச்சப்படுகின்றனர்.

இதன் காரணமாக தாம் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு, குழந்தைகளை சுமந்து கொண்டு நீண்ட தூரம் நடையில் சென்று பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதாக பாதிக்கப்பட்ட நபர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

எனவே, இவ்விடயம்  தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி, தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் வீடுகளுக்குச் சென்று பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .