2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘பிணங்கள் இருந்ததே காரணம்’

வா.கிருஸ்ணா   / 2018 ஜூன் 05 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - ஏறாவூர் - நான்காம், ஐந்தாம் வட்டாரங்களில் உள்ள வீடுகளில் இருந்த பல கிணறுகள், பிணங்கள் கிடந்ததன் காரணமாக, மண்போட்டு நிரப்பப்பட்டதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

எஸ்.வியாழேந்திரன் எம்.பி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, மீள்குடியேற்ற, இந்து கலாசார, புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் பொன்.சுரேஸ், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் ஆகியோர், அப்பகுதிக்கு நேற்று (04) மாலை நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

இதன்பின்னர் இது தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, வியாழேந்திரன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
நான்காம், ஐந்தாம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிணறுகளை மண்போட்டு மூடியிருக்கின்றோமெனக் குறிப்பிட்ட அவர், ஏனெனில் அந்தக் கிணறுகள் முழுவதும் பிணங்களே காணப்பட்டன எனவும் அவ்வாறு மிக மோசமான முறையில் எல்லைப் பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தன எனவும் தெரிவித்தார்.

கடந்த முறை காணியில்லாதவர்கள் பதிவு செய்யப்பட்டனர் எனக் குறிப்பிட்ட அவர், ஆனால் நான்காம், ஐந்தாம் பகுதிகளில், ஒருவர்கூட உள்வாங்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X