2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு’

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின், கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்னை பிரதேச மக்களின் பிரச்சினைகளை, நடமாடும் சேவையொன்றை ஏற்பாடு செய்து விரைவில் தீர்த்துத் தருவதாக,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அம் மக்களிடம் தெரிவித்தார்.

ரிதிதென்னை, கிராமத்து விவசாயிகளுக்கான தேசிய உரச் செயலகத்துக்கான மாவட்ட அலுவலகத்தினூடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேற்றைய பயிற்சிச் செயலமர்வில் கலந்து கொண்டு, மக்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்த போதே, அவர் மேற்கண்வடாறு கருத்துத் தெரிவித்தார்.

கிராமத்தில் காணப்படும் குடிநீர்ப் பிரச்சினை, வீதிப்பிரச்சினை, வீடில்லாப் பிரச்சினை, குளம் புனரமைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அவற்றை அரசாங்க அதிபர் தீர்த்துத்தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்தே, இம்மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் நடமாடும் சேவையொன்றின் மூலம் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர், மேலும் ​தெரிவித்தார்.

இப்பயிற்சிப்பட்டறையின் போது, பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், அரசாங்கத்தினால் விவசாயிகளுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்றிட்டங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.

விவசாயிகளுக்கான இவ்வாறான செயலமர்வுகள், எதிர்வரும் வாரங்களில் மாவட்டத்தின் ஏனைய பிரதேச கமநல சேவைகள் பிரிவுகளிலும் நடைபெறவுள்ளதாக தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .