2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரதேச சபையின் தவிசாளர் கடமைகளைப் பொறுப்பேற்பு

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேல் (பேரின்பம்)  நேற்று (16)  தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

பிரதேச சபை செயலாளர் க.பேரின்பராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஏறாவூர்ப்பற்று, பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நாகமணி கதிரவேல் (பேரின்பம்), ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் குடியிருப்பு வட்டாரத்தில் போட்டியிட்டு, 955 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வின் போது தவிசாளருக்காகப் போட்டியிட்டு 18 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார்.

சபைக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் 8 பேரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பில் 8 பேரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 7 பேரும்  தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 4 பேரும்,  தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு சார்பில் 2 பேரும், ஐக்கிய சமாதான கூட்மைப்பு சார்பில் ஒருவரும்  ஜனநாயக தேசிய இயக்கம் சார்பில் ஒருவரும் தெரிவாகியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .