2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பிரத்தியேக கல்வி நிலையங்களுக்கு புதிய கெடுபிடி

Editorial   / 2019 மே 05 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

 

காத்தான்குடி நகரசபைப் பிரிவிலுள்ள சகல பிரத்தியேகக் கல்வி நிலையங்களும், காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு,  மாலை 5 மணியுடன் மூடிவிட வேண்டுமென, காத்தான்குடி நகர சபையில் நேற்று (05) இடம்பெற்ற கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாக, காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

அத்துடன், வெள்ளிக்கிழமைகளில், சகல பிரத்தியேகக் கல்வி நிலையங்களும் மூடப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதெனவும், அவர் கூறினார்.

காத்தான்குடி நகரசபைப் பிரிவிலுள்ள சகல பிரத்தியேகக் கல்வி நிலையங்களையும் ஒழுங்குபடுத்தும் பொருட்டு நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தின் போது, சீருடை இல்லாத பிரத்தியேகக் கல்வி நிலையங்களில் கற்கும், தரம் 6 முதல் 13 வரையான மாணவர்கள், தங்களுடைய பாடசாலைச் சூருடையுடனேயே பிரத்தியேக் கல்வி நிலையங்களுக்குச் செல்லவேண்டும் என்றும், கல்வி நிலையங்களினால், மாணவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டதாக, அவர் கூறினார்.

அத்துடன், பாதுகாப்பு தொடர்பில் அனைவரும் கவனமாகச் செயற்பட வேண்டும் எனவும் எந்நேரமும் கண்காணிப்புடன் இருக்க வேண்டுமெனவும், உரிய தரப்பினருக்கு அறிவுரை வழங்கியதாக, நகரசபைத் தலைவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X