2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 23 வீடுகள் கையளிப்பு

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஜூலை 15 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில், நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்காக 550 வீட்டுத்திட்டங்கள், ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வருகிறன.

இத்திட்டத்தின் கீழ், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நவகிரி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய முன்மாதிரி வீடுகளை, பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு, பிரதேச செயலாளர் செல்வி ஆர்.ராகுலநாயகி தலைமையில், நேற்று முன்தினம் (14) நடைபெற்றது.

இதில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 23 வீடுகள், மிகவும் பாதிக்கப்பட்ட, வீடு இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த வீடுகள் சுற்றாடலுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இவ்வீட்டைப் பெரிதாகக் கட்டிக் கொள்ளக்கூடிய வகையிலும், வீட்டு உரிமையாளரின் விருப்பத்துக்கமைவாகவும் அமைக்கப்பட்டுள்ளதுடன், பயனாளிகளுக்கு வாழ்வாதார வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .