2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘புதிய மத்தியஸ்தங்களுக்கு முன்மொழிவுகள்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் சன சமூக மத்தியஸ்த சபைகளுக்கு மேலதிகமாக, நிதி சார்ந்த, புலம்பெயர் தொழிலாளர் சார்ந்த பிணக்குகளைத் தீர்க்கும் மத்தியஸ்த பிரிவுகளை உருவாக்கும் திட்டத்துக் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவென, மத்தியஸ்த சபையின் மட்டக்களப்பு, அம்பாறை பிராந்தியத்துக்கான பயிற்சி அலுவலர் எம்.ஐ.  முஹம்மத் ஆஸாத் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக விவரம் தெரிவித்த அவர், “தற்போது இயங்கிக்  கொண்டிருக்கும் சன சமூக மத்தியஸ்த சபைகளின் மூலம் கடந்தாண்டில் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்ட பிணக்குகளில் சுமார் 65 சதவீதமான பிணக்குகள் மத்தியஸ்தம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

“அந்த வகையில், கடந்தாண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 5,000 பிணக்குகளும், அம்பாறை மாவட்டத்தில் சுமார் 6,000 பிணக்குகளும் சுமுகமாக மத்தியஸ்தம் செய்யப்பட்டுள்ளன.

“மத்தியஸ்த சபைகளின் வகிபாகம், சமூகப் பிரச்சினைகளில் முக்கிய பங்கு வகிப்பதால், இன்னும் வினைத்திறனான வகையில் சமூகப் பிரச்சினைகளை அணுகித் தீர்வு காண்பதற்காக பல முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

“ஏற்கெனவே கற்றுக் கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக, காணிப் பிணக்குகளைக்  கையாள்வதற்காக காணி மத்தியஸ்த சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

“எனினும், மக்களிடம் இருந்து வரும் பிணக்குகளில் நிதி சார்ந்த பிணக்குகள் அதிகமாக இருப்பதால், மேலதிகமாக நிதி சார்ந்த பிணக்குகளைக் கையாளும் மத்தியஸ்த சபையும், அதேபோல புலம்பெயர் தொழிலாளர் சார்ந்த பிணக்குகளைத் தீர்க்கும் மத்தியஸ்த பிரிவுகளை உருவாக்கும் திட்டத்துக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X