2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘புத்தி கூற மனோ சிந்திக்க வேண்டும்’

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் மனோ கணேசன், வடக்கு, கிழக்குக்கு வந்து, தமது அரசியல் நிலைமையைக் குழப்புகின்றார் என்று குற்றஞ்சாட்டிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் புத்தி கூற நினைப்பது பற்றி, அவர் சிந்தித்துச் செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) கிளையைப் புனரமைப்பது தொடர்பான கூட்டம், கிளைத் தலைவர் சி.சர்வானந்தன் தலைமையில் நேற்று (06) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே, செயலாளர் கி.துரைராசசிங்கம், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் மனோ கணேசனுக்கு ஏற்பட்ட பல சவால்களை, சுமந்திரன் நேரடியாகப் பேசித் தணித்து வைத்தார் என்று குறிப்பிட்ட அவர், இதையெல்லாம், அமைச்சர் மனோ மறந்துவிட்டார் எனவும், இவற்றை வெளியில் கூற தாங்கள் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும், வடக்கு, கிழக்குக்கு மேலதிகமாக, தமிழ் மக்கள் வாழ்கின்ற எல்லா இடங்களிலும், தேர்தல்களில் போட்டியிட வேண்டுமென, த.தே.கூக்குத் தீர்மானம் எடுக்க முடியுமென்றும், அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் புதிய அரசமைப்பை உருவாகுவது உறுதியென்றும், கூடுதலான அதிகாரப் பகிர்வுகளுடன் அரசமைப்பு வருகின்றபோது, அதை ஏற்றுக்கொள்வதற்கும் மக்களிடம் எடுத்துச் செல்லவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X