2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கிராம பெண்கள் உதவி

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையொன்றின் வைத்தியச் செலவுகளுக்காக, கிராம மட்டப் பெண்கள் குழு அங்கத்தவர்கள் இணைந்து சில நிமிட நேரத்தில், சுமார் 21 ஆயிரம் ரூபாயைச் சேகரித்து, உதவு ஊக்கத் தொகையாக வழங்கியுள்ளனர்.

உணர்வுபூர்வமான இந்நிகழ்வு, மட்டக்களப்பு - பட்டிப்பளைப் பிரதேசத்தில் நேற்று (15)  இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட 'அருவி' பெண்கள் வலையமைப்பின் கிராம மட்டப் பெண்கள் சிறு குழு அங்கத்தவர்களுடனான விழிப்புணர்வுக் கலந்துரையாடல், நிறுவனப் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்றபோது, மாற்றுத்திறனாளியான சிறு குழு அங்கத்தவர், தனது குழந்தை புற்றுநோயால் அவதியுறுவதைத் தெரியப்படுத்தனார்.

இதனை அறிந்து கொண்ட சக அங்கத்தவர்களான பெண்கள் உடனடியாக  தலா 100 ரூபாய் சேகரித்து, சில நிமிடங்களில் 21,000 ரூபாயை வழங்கினர்.

இந்நிகழ்வு மனதை நெகிழ வைத்ததோடு, கிராமிய மக்களின் சிறு முயற்சியும் சமூக ஒற்றுமையையும் பெரு வெற்றியளிக்கும் என்பதை உறுதிப்படுத்தியாக, 'அருவி' பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .