2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புல்லுமலை, தொழிற்சாலை தொடர்பில் மீளாய்வு

வா.கிருஸ்ணா   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

புல்லுமலை, தொழிற்சாலை தொடர்பில், மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், படுவான்கரை பிரதேச மக்கள் எதிர்நோக்கும் குடிநீர்ப்பிரச்சினை தொடர்பிலும், நாடாளுமன்ற உறுப்பினர் வடகிழக்கு மாகாண அபிவிருத்தி செயலணி கூட்டத்தின்போது எடுத்துக்கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் தலைமையில் வடகிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான செயலணியின் கூட்டம் இன்று(04) நடைபெற்ற போதே, நாடாளுமன்ற உறுப்பினர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

நடைபெற்ற வடக்கு - கிழக்கு ஜனாதிபதி அபிவிருத்தி செயலணியில், இரண்டாவது தடவையாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் எடுத்துக்கூறினேன்.

குறிப்பாக புல்லுமலையில் அமைக்கப்படும் குடிநீர் போத்தல் தயாரிக்கும் தொழிற்சாலை தொடர்பில் தெரிவித்தேன், எனது கருத்துக்களை செவிமடுத்த ஜனாதிபதி புல்லுமலை தொழிற்சாலைக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தார்.

தொழிற்சாலை தொடர்பான, அனைத்து அறிக்கைகளையும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் எதிர்வரும் மாதம் 8 திகதிக்கு முன்னர் சமர்பிக்கும் படி ஜனாதிபதி பணித்துள்ளார்.

அத்துடன், தேவபுரம் அரிசி ஆலையை விரைவில் தொடங்குவது, படுவான்கரையிலிருந்து செல்லும் உன்னிச்சை தண்ணீர் நகர் பகுதிகளுக்கு கிடைக்கிறது.

ஆனால், இன்றும் படுவான்கரையில் பல பகுதிகளில் மக்கள் குடிநீரின்றி சிரமப்படுகின்றனர். எனவே விரைவில் அவர்களுக்கான குடிநீர் வளங்கபட வேண்டுமென்றும் கோரிக்கையினை முன்வைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .