2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புல்லுமலை மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஜூன் 05 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரிய புல்லுமலைப் பகுதியில், குடிநீர் போத்தல் உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்துமாறு கோரி, அப்பிரதேச மக்களால், இன்று (05) ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“பதுளை வீதியிலுள்ள அதிகமான பகுதிகளில் முழுமையான நீர்ப்பற்றாக்குறை காணப்படுகிறது. இவ்வாறு நீர்ப்பற்றாக்குறை காணப்படும் பகுதிகளில், நிலக்கீழ் நீர், குளங்கள், உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்டம் போன்றவற்றின் மூலம் நீரைப் பெற்று அத்தண்ணீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யும் தொழிற்சாலையாக, இத்திட்டம் அமையவுள்ளதாக, எம்மால் அறியக்கூடியதாகவுள்ளது.

“குடிப்பதற்கே நீர் இல்லாமல் அல்லோலப்படும் இவ்வேளையில், மழை நீர் மூலம் குளங்களில் சேமிக்கப்பட்டுள்ள நீரையோ அல்லது நிலக்கீழ் நீர் மூலமோ அல்லது நீர்ப்பாசனத் திட்டம் மூலமோ வழங்கப்படும் நீரைப் பயன்படுத்தி, இதுபோன்ற தொழிற்சாலை செயற்படுமாயின், எமது பகுதி மக்கள் குடிப்பதற்கு நீர் இன்றி பலதரப்பட்ட நோய்களுக்கும் இன்னல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

“எனவே, இத்தொழிற்சாலை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து நடவடிக்கைகளும் உடன் நிறுத்த வேண்டும்” எனவும் அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .