2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பெண் வைத்திய அதிகாரி மரணம்

Editorial   / 2019 ஜனவரி 02 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

திடீர் சுகவீனம் காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த ஏறாவூரைச் சேர்ந்த பெண் வைத்திய அதிகாரி, சிகிச்சை பயனற்றுப்போன நிலையில் நேற்று முன்தினம் (31) மாலை உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாகப் பணியாற்றிய இரு குழந்தைகளுக்குத் தாயான மர்சூக்கா றிஸ்வி (வயது 42) என்பவரே மரணித்தவராவார்.

சமீப சில நாள்களுக்கு முன்னர் திடீர் சுகவீனம் ஏற்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, கொழும்பு தனியார் வைத்தியசாலை என்பவற்றிலும் இறுதியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர​் உயிரிழந்துள்ளார்.

இவர், ஏறாவூரின் வைத்தியத்துறை வரலாற்றில் 3ஆவது பெண் அரசாங்க வைத்தியராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரது ஜனாஸா, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஏறாவூருக்கு எடுத்து வரப்பட்டு, ஏறாவூர் காட்டுப்பள்ளி மையவாடியில் நேற்று (01) நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதேவேளை, ஏறாவூரில் பல்வேறு சமுதாய விழுமியங்களையும் சவால்களையும் தகர்த்துக்கொண்டு ஒரு பெண் வைத்தியராக பரிணமித்து மக்களுக்காய் சேவையாற்றிய பெண் வைத்தியர் மர்சூக்காவின் இழப்பு, முழு ஏறாவூருக்கும் பாரிய இழப்பாகுமென, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X