2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘பெண்களின் அரசியல் உரிமையை பாதுகாக்கவும்’

வா.கிருஸ்ணா   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

 

“பெண்களின் அரசியல் உரிமையைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு, சிவில் சமூக அமைப்புகளுக்கும் அரசாங்கத்துக்கும் இருக்கின்றது” என, கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் எம்.எல்.புகாரி தெரிவித்தார்.

பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் நோக்கிலும் பால்நிலை சமத்துவத்தை நோக்காகக் கொண்டும், வருடாந்தம் அமுல்படுத்தப்பட்டுவரும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்களைக் கொண்ட செயலமர்வின் இறுதி நாள் நிகழ்வு, இன்று (12) நடைபெற்றது.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சினதும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினதும் அனுசரனையுடன், கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில், கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் எம்.எல்.புகாரி தலைமையில், மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.மண்டபத்தில், இந்நிகழ்வு நடைபெற்றது.

இங்கு உரையாற்றும் போதே, கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர் தெரிவிக்கையில்,

“வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதமானவர்கள் பெண்கள் சிறுமியர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களுக்கு எந்த நியாயமும் கிடைக்காத நிலையே காணப்படுகின்றது. அதன் காரணமாகத்தான் அவர்களுக்கான விசேட தினங்கள் உருவாக்கப்பட்டு, அவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற கோசங்கள் முன்வைக்கப்படுகின்றன.

“பெண்களின் அரசியல் உரிமைகளை மேம்படுத்தவேண்டும் என்ற நோக்குடன், பல்வேறு செயற்பாடுகள், இந்த நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், பெண்கள் தேர்தலில் ஈடுபடுவதற்கான பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன.

“பெண்கள் அரசியலுக்கு ஈடுபடுவதில் பூரண விருப்பங்கள் இருந்தாலும் அவர்கள் அரசியலில் சுயாதீனமாக ஈடுபடுவதற்குப் பல்வேறு தடவைகள் அவர்களைச் சுற்றிக்காணப்படுகின்றன” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .