2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

‘பெண்களை சமூகம் அங்கிகரிக்க வேண்டும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 டிசெம்பர் 14 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மது விநியோக அரசியல், செல்வாக்கு, ஊழல், மோசடி, அந்தஸ்து, பாரம்பரியம், பால்நிலை  என்பனவற்றுக்கு அப்பால் பெண்கள் ஒரு மனித சமூக அங்கத்தவர் என்ற ரீதியில் பெண்களை சமூகம் அங்கிகரிக்க வேண்டும்” என பெண்கள், சிறுவர் உரிமைகள் செயற்பாட்டாளரும் சமூக சேவகியுமான ஆர். சிவகுமாரி தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலில் பெண்களுக்கு சட்டத்தின் மூலம் கட்டயாமாக்கப்பட்டுள்ள 25 சதவீத பிரதிநிதித்துவம் பற்றி, இன்று (14) ஊடகங்களுக்கு ஊடாகப் பெண்களுக்கு விழிப்பூட்டலைச் செய்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

“காலாகாலமாக பெண்களுக்கு இருந்து வந்த பாரம்பரியத் தடைகளை நீக்கும் வண்ணம் பெண்கள் அரசியலில் நுழைவதற்கு சட்டத்தின் மூலம் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனை சாதனை படைக்கும் வாய்ப்பாகப் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

“பெண்களுக்களின் முன்னேற்றத்துக்கான தடைகளை நீக்குவதில் உள்ளூராட்சித் தேர்தலில் பெண்களுக்கு சட்டத்தின் மூலம் கட்டயமாக்கப்பட்டுள்ள 25 சதவீத பிரதிநிதித்துவம் என்பதே முதலில் ஒரு வெற்றியாகக் கொள்ளப்பட வேண்டும்.

“இவ்வாறு சட்டம் அங்கிகரித்த விடயத்தை சமூகமும் அங்கிகரிக்க வேண்டும்.

“குறிப்பாக, நாட்டின் மக்கள் தொகையிலும் வாக்காளர் தொகையிலும் பாதிக்கு மேற்பட்டோர் பெண்களாவர்.

“எனவே, இந்த விடயத்தில் 'பெண்கள் சமூகம்' என்ற ரீதியில் இன, மத, மொழி கடந்து பெண்கள் சமூகமே முதலில் பெண்களுக்கு அந்தஸ்தை வழங்க வேண்டும்.

“அந்த மாற்றம் வீட்டிலிருந்து தொடங்கி தேசம் என்ற வகையில் வியாபிக்க வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .