2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பேராயருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பரிந்துரை

Editorial   / 2019 மே 05 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

 

பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்​டகைக்கு, ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த வேண்டும் என்ற விவாசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, இதற்கான நடவடிக்கைகளைத் தான் முன்னெடுத்து வருவதாகக் கூறினார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, தையல் பயிற்சியை நிறைவுசெய்த 144 யுவதிகளுக்கு, தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு, வாழைச்சேனை அந்நூர் தேசியப் பாடசாலை மண்டபத்தில், சனிக்கிழமை மாலை நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், எந்தவொரு நாட்டிலும் இதற்குப் பிறகு, முஸ்லிம் சமூகத்தின் பெயரால் பயங்கரவாதம் இடம்பெறக் கூடாது என்றும், தற்கொலை என்கின்ற விடயம், எந்தவொரு நாட்டிலும் இருக்கக்கூடாது என்றும் கூறியதோடு, இந்த நோபல் பரிசுக்கான பரிந்துரையானது, உயிரிழந்தவர்களின் பெயருக்காகவோ அல்லது காயமடைந்தவர்களின் உடலுக்காகவும் அல்லவென்றும் கூறினார்.

தன்னைப் பொறுத்தவரையில், நாடாளுமன்றத்திலும் வெளியிலும், இஸ்லாம் பயங்கரவாதம் இருக்கின்றது என்றும்  இவர்கள், தற்கொலைக் குண்டுதாரர்களாக வருவார்கள் என்றெல்லாம் பேசிய போது, தான் அதை ஏற்கவில்லை என்றும், அதற்குக் காரணம், உண்மையான முஸ்லிம், தற்கொலை செய்துகொள்ள மாட்டான் என்ற நம்பிக்கை தனக்கிருந்ததாகவும், இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இஸ்லாத்தை சரியாகப் புரிந்துகொண்டு , மானியத்தோடு வாழ்க்கை நடத்த வேண்டும் என்று என்னுகின்ற எந்தவொரு முஸ்லிமும், தற்கொலை என்கின்ற விடயத்துக்குப் போகமுடியாது. ஏனெனில், தற்கொலையில் அவன் சுவர்க்கம் அடைய முடியாது என்றும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X