2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘பொதுமக்களின் காணிகளை இராணுவத்துக்கு வழங்குவதை அனுமதிக்கமாட்டோம்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மே 15 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஏறாவூர், புன்னைக்குடா பிரதேசத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை இராணுவத்துக்கு வழங்குவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்” என தேசிய நல்லிணக்கம், ஒருமைப்பாடு மற்றும்  அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா தெரிவித்தார்.

மட்டக்களப்பு -அம்பாறை மாவட்டங்களில்  இராணுவ முகாம்கள்  பொலிஸ் நிலையங்கள் அடங்கலாக பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள  பொதுமக்களின் காணிகளை விடுவித்து, முகாம்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பான உயர்மட்டக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (14) நடைபெற்றது.

மீள் குடியேற்ற  புனர்வாழ்வு இந்து கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் பொன்னையா சுரேஷ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் அமைந்துள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகளை சுவீகரித்து, இராணுவ களஞ்சியசாலை அமைப்பது தொடர்பான விடயம் கொண்டு வரப்பட்ட போது, நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான அலி சாகிர் மௌலானர் தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர் அலிசாஹீர் மௌலானா,

“பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதியை அண்டியதாக பாரிய முகாம் அமைப்பது பொருத்தம் அற்றது. அத்துடன், பாரிய இடப்பற்றாக்குறையை மக்கள் எதிர்கொண்டு வரும் சூழலில், பொதுமக்களின் காணிகளை தாரை வார்த்துக் கொடுக்க முடியாது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X